ஜெ.தீபாவிடம் NOC - ஏ.எல்.விஜய் இயக்கும் `தலைவி' ஜெயலலிதா பயோபிக்! | A.L Vijay's Jayalalitha Bio-pic has been titled as 'Thalaivi'!

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (24/02/2019)

கடைசி தொடர்பு:18:00 (24/02/2019)

ஜெ.தீபாவிடம் NOC - ஏ.எல்.விஜய் இயக்கும் `தலைவி' ஜெயலலிதா பயோபிக்!

ஜெயலலிதாவின் பயோபிக்கை போட்டி போட்டுக்கொண்டு கோலிவுட் இயக்குநர்கள் உருவாக்கி வருகின்றனர். பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்துவருகின்றனர். மேலும், கெளதம் மேனன் ஜெயலலிதா பயோபிக்கை வெப்-சீரீஸாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா

இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், சசிகலாவாக விஜி சந்திர சேகரும் நடிக்கின்றனர். மேலும், லிங்குசாமி படத்தில் நயன்தாராவும், பிரியதர்ஷினி படத்தில் நித்யா மேனனும் ஜெயலலிதாவாக நடிக்கின்றனர். 

Jayalalitha

இதற்கிடையே, ஏ.எல்.விஜய் இயக்கம் பயோபிக் படத்துக்கு 'தலைவி' என்றும் டைட்டில் வைத்துள்ளனர். ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளான இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும், பாகுபலி படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் இப்படத்துக்கு இணை கதாசிரியராக இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவி

இப்படம் குறித்துப் படக்குழு விடுத்திருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, "இது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாற்றுப் படம். ஏனெனில், ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகள் தீபாவிடமிருந்து NOC (No Objection Certificate) பெற்ற பின்னரே படத்தை உருவாக்கி வருகிறோம்" என்று கூறியிருக்கிறார்கள். இதே ஏ.எல்.விஜய் தான் `தலைவா' படத்தை இயக்கினார். இதேபோல் ஏ.எல்.விஜய்யுடன் ஜி.வி பிரகாஷ்குமார் மீண்டும் இணைந்துள்ளதால் படம் குறித்து எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.


[X] Close

[X] Close