அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதல் முறையாக மோடி புகைப்படம்! | pm modi photo at admk head office

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (24/02/2019)

கடைசி தொடர்பு:19:30 (24/02/2019)

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதல் முறையாக மோடி புகைப்படம்!

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதல் முறையாகப் பிரதமர் மோடி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. 

ஜெயலலிதா

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க-வின் முன்னாள் பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர் உட்பட கட்சித் தொண்டர்கள் அனைவரும் இந்த கொண்டாட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர். இதற்கிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டுள்ளது. மோடியின் படம் அங்கு இடம்பெறுவது இது முதல் முறை.

மோடி

அதன்படி, மோடியிடம், ஜெயலலிதா கோரிக்கை மனு அளிப்பது போன்ற படம் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு வாஜ்பாய் - ஜெயலலிதா புகைப்படம் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக மோடி படமும் இடம்பெற்றுள்ளது. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி இறுதி செய்யப்பட்ட நிலையில் இந்தப் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய்

அதில், ``ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் தலைமுறைகளைக் கடந்தும் நினைவில் நிற்கும். சிறந்த நிர்வாகத் திறனும், கருணை உள்ளமும் கொண்ட அவர் கொண்டு வந்த நலத்திட்டங்களால் எண்ணிலடங்கா ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close