'தல-59' படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம் - குஷியில் ரசிகர்கள்! | Delhi Ganesh has joined in 'Thala-59' movie of Pink remake!

வெளியிடப்பட்ட நேரம்: 21:03 (24/02/2019)

கடைசி தொடர்பு:08:09 (25/02/2019)

'தல-59' படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம் - குஷியில் ரசிகர்கள்!

ப்ளாக் பஸ்டர் ஹிட் விஸ்வாசத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் வெளிவந்த  'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஜித்.

தல 59

நான்கு படங்கள் அஜித்-சிவா கூட்டணியில் வெளிவந்ததையடுத்து 'தல-59' படத்தை இயக்குநர் வினோத் இயக்குகிறார். இவர் இதற்கு முன்னர் கார்த்தி நடித்து வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் இப்படத்தை தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

Delhi Ganesh

இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, வித்யா பாலன், ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் நடிக்கின்றனர் என்று சென்ற மாதம் செய்தி வெளியானது. தற்போது, இக்கூட்டணியில் நடிகர் டெல்லி கணேஷ் இணைகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 'ஜனா', 'பகைவன்', 'என் வீடு என் கணவர்', 'தொடரும்' ஆகிய படங்களில் டெல்லி கணேஷ் மற்றும் அஜித் சேர்ந்து நடித்துள்ளனர். தற்போது, 'தல-59' படத்தின் இரண்டாவது ஷெடியூல் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் சென்றுகொண்டிருக்கிறது. மேலும், இப்படம் மே-1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று ரிலீசாகும் என்ற செய்திகள் கோலிவுட்டில் உலா வந்த வண்ணம் இருக்கிறது. 


[X] Close

[X] Close