‘தமிழகத்தின் வளர்ச்சிதான் இலக்கு; கூட்டணிக்கு ஆதரவு கொடுங்கள்!’ -அன்புமணி வேண்டுகோள் | 'Growth is the goal; Give me support! -Anbumani

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (24/02/2019)

கடைசி தொடர்பு:20:20 (24/02/2019)

‘தமிழகத்தின் வளர்ச்சிதான் இலக்கு; கூட்டணிக்கு ஆதரவு கொடுங்கள்!’ -அன்புமணி வேண்டுகோள்

‘‘நாங்கள் ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல... தமிழகத்தின் வளர்ச்சிதான் பா.ம.கவின் இலக்கு. எங்களின் கூட்டணிக்கு ஆதரவு கொடுங்கள்’’ என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அன்புமணி

வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் இன்று காலை நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில், பா.ம.க இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘‘பாலாறு, பால் போன்ற ஆறாகப் பாய்ந்தது. இன்று, பாலாற்றில் தண்ணீரும் இல்லை. மணலும் இல்லை. தோல் பதனிடும் தொழிற்சாலைகளால், பாலாறு மிகவும் மாசடைந்திருக்கிறது. 1996-ல் பாலாற்றைக் காப்பதற்காக சைக்கிளில் 5 ஆயிரம் இளைஞர்களுடன் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்தோம். அதைத்தொடர்ந்து, பாலாற்றில் கழிவுகளை அகற்றக்கோரி 2011-ல் நான், ராணிப்பேட்டையிலிருந்து வேலூர் வரை சைக்கிளில் பயணம்செய்து வலியுறுத்தினேன். 

ஆந்திர மாநிலம், குப்பத்தில் பாலாற்றின் தடுப்பணைகளை, இப்போது உயர்த்திக் கட்டியுள்ளனர். அங்கேயும் போராட்டம் நடத்தியுள்ளோம். நீர்நிலைகளைப் பாதுகாப்பதும், நீர் ஆதாரங்களைப் பெருக்குவதுமே பா.ம.கவின் நோக்கங்கள். வாழ்வாதாரத்தை இழந்துநிற்கிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவை அவசியம் தரவேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் எங்களுடைய நோக்கம். பா.ம.கவின் இலக்கு, தமிழகத்தை ஆள்வது கிடையாது. முன்னேற்றுவது தான். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே, எங்கள் மூலமாக எவ்வளவோ திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது’’ என்றார்.


[X] Close

[X] Close