போரூரில் தனியார் குடோனில் பெரும் தீ விபத்து - 200 கார்கள் எரிந்து நாசம்! | 200 cars gutted in fire near chennai porur

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (24/02/2019)

கடைசி தொடர்பு:08:52 (25/02/2019)

போரூரில் தனியார் குடோனில் பெரும் தீ விபத்து - 200 கார்கள் எரிந்து நாசம்!

சென்னை போரூர் அருகே உள்ள தனியார் கார் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 

விபத்து

12-வது சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரின் எலங்கா பகுதியில் நடந்து வருகிறது. நேற்று விமான கண்காட்சி நடைபெறும் பகுதியில் இருந்த பார்க்கிங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. இந்த நிலையில் இன்று சென்னை போரூர் பகுதியில் உள்ள தனியார் கார் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 

ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள இடத்தில் தனியார் வாடகைக் கார் நிறுத்துமிடம் செயல்பட்டு வருகிறது. இங்குதான் எதிர்பாராத தீவிபத்து ஏற்பட்டது. கார் குடோனின் அருகில் இருந்த குப்பைக்கிடங்கில் தீப்பற்றி, பின்னர் அது கார் குடோனுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தால் கார் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி எரிந்து நாசமாகின. விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

விபத்து

சம்பவ இடத்துக்கு வந்த 4 தீயணைப்பு வாகனங்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டுள்ளது. கார்கள் தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதியில் பெருமளவில் கரும்புகை சூழ்ந்துள்ளது. தீவிபத்தைக் காண அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close