அமலா பாலை ரீப்ளேஸ் செய்யும் அனுபமா! - தெலுங்கு `ராட்சசன்' அப்டேட் | Anupama Parameshwaran replaces Amala paul in Telugu 'Ratchasan' movie!

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (25/02/2019)

கடைசி தொடர்பு:08:37 (25/02/2019)

அமலா பாலை ரீப்ளேஸ் செய்யும் அனுபமா! - தெலுங்கு `ராட்சசன்' அப்டேட்

விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடித்து வெளியான சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படமான 'ராட்சசன்' தற்போது தெலுங்கில் ரீமேக்காகவிருக்கிறது. இதில் விஷ்ணு விஷாலுக்குப் பதிலாக பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸும், அமலா பாலுக்குப் பதிலாக அனுபமா பரமேஸ்வரனும் நடிக்கவிருக்கின்றனர்.

ராட்சசன்

இதை அறிமுக இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்குகிறார். தமிழில் ராட்சசனுக்கு இசைமைத்த ஜிப்ரான்தான் இப்படத்துக்கும் இசையமைக்கவிருக்கிறார். 

அமலா பால்

முன்னதாக அமலா பால் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ராஷி கண்ணா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் கால்-ஷீட் கிடைக்காததானால் தற்போது இதில் அனுபமா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்கு முன்னர் மலையாளத்தில் ஹிட்டடித்த 'ப்ரேமம்' படம் மூலம் அறிமுகமாகி, தமிழில் தனுஷுடன் 'கொடி' படத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close