நடிகை விஜயலக்ஷ்மி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!  | Actress Vijayalakshmi has been admitted in hospital as she is not well!

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (24/02/2019)

கடைசி தொடர்பு:08:36 (25/02/2019)

நடிகை விஜயலக்ஷ்மி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி! 

1998-ம் ஆண்டு 'பூந்தோட்டம்' எனும் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை விஜயலக்ஷ்மி. கன்னடப் படங்களில் பிரதானமாக நடித்துவரும் இவர் கடைசியாக ஹிப் ஹாப் தமிழாவின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் 'ஃப்ரெண்ட்ஸ்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'தில்லாலங்கடி', 'தம்பிக்கோட்டை' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இது 'தவிர', 'நந்தினி', 'முத்தாரம்', 'செல்லமே' ஆகிய சீரியல்களிலும் நடித்திருக்கிறார். 

விஜயலக்ஷ்மி

இதற்கிடையே நடிகை விஜயலக்ஷ்மி அதிக ரத்த அழுத்தம் காரணமாக பெங்களூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தினால், இவர் ஐ.சி.யூ பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இவரது சகோதரி உமா தேவி சினிமா துறையில் உள்ள பிரமுகர்களிடம் விஜயலக்ஷ்மியின் மருத்துவச் செலவுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

விஜயலக்ஷ்மி சில காலங்களாக உடல்நலக் குறைவு காரணமாகச் சினிமா துறையிடமிருந்து விலகியிருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இவர் 2006-ம் ஆண்டு சில குடும்பப் பிரச்னைகளால் தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. 


[X] Close

[X] Close