திருட்டு மின்சாரம் எடுத்து சிக்கிய அ.ம.மு.க-வினர் - ஜெ.பிறந்த நாள் விழாவில் நடந்த சோகம்! | Jayalalitha birthday Celebration

வெளியிடப்பட்ட நேரம்: 21:55 (24/02/2019)

கடைசி தொடர்பு:10:34 (25/02/2019)

திருட்டு மின்சாரம் எடுத்து சிக்கிய அ.ம.மு.க-வினர் - ஜெ.பிறந்த நாள் விழாவில் நடந்த சோகம்!

மின்சாரம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.ம.மு.க-வினர் முவரசன்பேட்டையில் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், அப்பகுதியில் ஒலிப்பெருக்கியை கட்டி பாடல்களை இசைக்கச் செய்தனர். 

மூவரசன்பேட்டை பகுதியில் இருக்கும் குளத்தை தூர்வாரும் பணியில் சகாயம் ஐ.ஏ.எஸ் வழிகாட்டுதலில் செயல்படும் மக்கள் பாதை அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். குளத்தை தூர்வாரிய அந்த அமைப்பினர் மேலும் குளம் மாசுபடாமல் இருப்பதற்காக மக்களிடம் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். அ.ம.மு.க-வினர் திருட்டுத் தனமாக மின்சாரத்தை எடுத்து ஒலிப்பெருக்கியை இசைக்கச் செய்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அக்கட்சி நிர்வாகிகளிடம் முறையிட்டனர். ஆனால் அவற்றை எல்லாம் காதில் வாங்காத நிர்வாகிகள் இது எங்கள் ஆட்சி என்று கூறியுள்ளனர். 

மக்கள் பாதை அமைப்பினர்

இது மக்களின் வரிப்பணம் இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் மின்சாரத்தை திருடினால் அரசுக்கு எண்ணற்ற கோடி வருவாய்  இழப்பு ஏற்படும் எனவே, நாங்கள் எங்கெல்லாம் ஊழல், லஞ்சம், திருட்டு நடைபெறுகிறதோ அதை தட்டிக் கேட்போம் என்று மக்கள் பாதை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மக்கள் பாதை அமைப்பினரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் மின்சார இணைப்பை துண்டித்து விட்டு அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுச் சென்றனர். 

சம்பவம் குறித்து அமமுக தரப்பில் பேசும்போது, ``நிகழ்ச்சியை நடத்தியவர்கள் அதிமுக கிளை செயலாளர் சிட்டிபாபு தலைமையில் நடைபெற்றது. எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. எங்கள் மீது தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது" என்றனர்.


[X] Close

[X] Close