`7 பேரை விடுதலை செய்ய ஏன் மறுக்கிறார்கள் எனத் தெரியவில்லை' - அற்புதம்மாள் பேட்டி! | arputhammal urges perarivalan release

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (25/02/2019)

கடைசி தொடர்பு:07:50 (25/02/2019)

`7 பேரை விடுதலை செய்ய ஏன் மறுக்கிறார்கள் எனத் தெரியவில்லை' - அற்புதம்மாள் பேட்டி!

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு அரசு உறுதியாக உள்ளது. ஆனால் ஆளுநர் முட்டுக்கட்டையாக  உள்ளார் எனக் கடலூரில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் குற்றம் சாட்டியுள்ளார்.

அற்புதம்மாள்

பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் 7 பேரை விடுதலை செய்யக் கோரி வருகின்ற 9-ம் தேதி சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் மனிதச் சங்கிலி பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்து வருகிறார். இன்று  கடலூரில் நகர அரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, ``பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்குத் தமிழக அரசு உறுதியாக உள்ளது ஆனால், ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார். நாங்கள் சட்டப்படி செயல்படுகிறோம். ஆனால், ஆளுநர் சட்டத்தை மீறிச் செயல்படுகிறார். மும்பை வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் சஞ்சய் தத்தை நன்னடத்தை பேரில் விடுதலை செய்தனர். ஆனால், 28 ஆண்டுக்காலம் சிறையில் உள்ள 7 பேரை ஏன் விடுதலை செய்ய மறுக்கிறார்கள்" இவ்வாறு கூறினார். 


[X] Close

[X] Close