`கண்ணே கலைமானே படம், குடும்பப் பாங்கானது’ - வேலூர் தியேட்டரில் கொண்டாடிய உதயநிதி ஸ்டாலின்! | 'Kanne Kalai maane film, family style!' -Udayanidhi Stalin celebrated at Vellore Theater

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (25/02/2019)

கடைசி தொடர்பு:09:15 (25/02/2019)

`கண்ணே கலைமானே படம், குடும்பப் பாங்கானது’ - வேலூர் தியேட்டரில் கொண்டாடிய உதயநிதி ஸ்டாலின்!

வேலூரில் உள்ள திரையரங்கில் கேக் வெட்டிக் கொண்டாடிய உதயநிதி ஸ்டாலின், ‘‘கண்ணே கலைமானே படம் குடும்ப பாங்கானது... குடும்பத்துடன் சென்று படத்தைப் பாருங்கள்’’ என்று  தெரிவித்தார்.

பொதுக்கூட்டத்தில் பேசும் உதயநிதி ஸ்டாலின்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தார்வழி கிராமத்தில், தி.மு.க சார்பில் நேற்று மாலை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொள்வதற்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், வேலூர் வந்திருந்தார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்குச் செல்வதற்கு முன்பாக, அவர் நடிப்பில் தற்போது திரைக்கு வந்துள்ள ‘கண்ணே கலைமானே’, படம் திரையிடப்பட்டிருந்த வேலூரில் உள்ள வீனஸ் திரையரங்குக்கு மதியம் 3 மணி காட்சிக்குச் சென்றார். அங்கு, வி.ஐ.டி பல்கலைக் கழக வேந்தர் விசுவநாதனுடன் அமர்ந்து, படத்தைப் பார்த்தார். அப்போது, படம் வெற்றியடைய திரையரங்கிற்குள் ரசிகர்கள் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள்

பின்னர், ரசிகர்கள் மத்தியில் உதயநிதி பேசுகையில், ‘‘கண்ணே கலைமானே படம் குடும்பப் பாங்கானது. அனைவரும் குடும்பத்துடன் சென்று படத்தைப் பாருங்கள்’’ என்றார். அவருடன், இப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமி மற்றும் ஒளிப்பதிவாளர் ஜலன்தர் வாசன் உட்படப் படக்குழுவினர் சிலர் இருந்தனர். `கண்ணே கலைமானே' படத்தை ஒளிப்பதிவு செய்த ஜலன்தர் வாசன், வேலூரைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அணைக்கட்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இதில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உட்பட தி.மு.க-வினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


[X] Close

[X] Close