சுற்றுலாப் பயணிகளை பதறவைத்த விபத்து! - அலட்சியத்தில் ஊட்டி நகராட்சி நிர்வாகம் | Tourist injured in ooty after fall municipality building fall

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (25/02/2019)

கடைசி தொடர்பு:12:25 (25/02/2019)

சுற்றுலாப் பயணிகளை பதறவைத்த விபத்து! - அலட்சியத்தில் ஊட்டி நகராட்சி நிர்வாகம்

நீலகிரி மாவட்டம், ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் பராமரிப்பு இல்லாத நகராட்சி கட்டடத்தால் சுற்றுலாப் பயணி காயமடைந்தார்.

நகராட்சி கட்டடம்

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகரின் மத்திய பகுதியான சேரிங்கிராஸில், போதிய பராமரிப்பு இல்லாத நகராட்சி கட்டடத்தில் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் கற்கள் பெயர்ந்து விழுந்ததில் சுற்றுலாப் பயணி ஒருவர் காயமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. காயமடைந்த சுற்றுலாப் பயணி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மாலை நேரங்களில் அரசு தாவரவியல் பூங்காவிலிருந்து சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை வழியாக மார்க்கெட் வரை நடந்து சென்று தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.

நகராட்சி கட்டடத்தின் மேற்கூரை சிமெண்ட் கற்கள் விழுந்து படுகாயம் அடைந்த சுற்றுலாப் பயணி

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சேரிங்கிராஸ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது போதிய பராமரிப்பு இல்லாத நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் கற்கள் பெயர்ந்து  சுற்றுலாப் பயணி மீது விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மற்றும் இதுபோன்ற கட்டடங்களை ஊட்டி நகராட்சி முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close