சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் `நாச்சியார்' இவானா!  | Ivana is onboard for Sivakarthikeyan's next film!

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (25/02/2019)

கடைசி தொடர்பு:14:38 (25/02/2019)

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் `நாச்சியார்' இவானா! 

ஜோதிகா நடித்து பாலா இயக்கத்தில் வெளிவந்த 'நாச்சியார்' படத்தில் அறிமுகமான நடிகை இவானா. தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்..

இவானா

சிவகார்த்திகேயனின் 15-வது படமான இதில், இவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். தெலுங்கில் 'ஹலோ' படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை கல்யாணிக்கு தமிழில் இதுதான் முதல் படம். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பி.எஸ்.மித்ரன் இயக்குநராக அறிமுகமாகிய 'இரும்புத்திரை' படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன், இப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து மே-1 வெளியாகவிருக்கும் `மிஸ்டர். லோக்கல்' படத்துக்குப் பிறகு இப்படத்தின் ஷூட்டிங் துவங்கும் என்று தகவல் தெரிவித்துள்ளது படக்குழு. மேலும், `இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமாரின் அடுத்த சயின்ஸ்-ஃபிக்ஷன் படத்திலும் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close