பிரபாஸின் `சாஹோ' படத்தின் மேக்கிங் வீடியோ -படக்குழுவின் புதிய அறிவிப்பு! | 'Saaho' movie's Chapter-2 video is gonna out on March 3!

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (25/02/2019)

கடைசி தொடர்பு:15:15 (25/02/2019)

பிரபாஸின் `சாஹோ' படத்தின் மேக்கிங் வீடியோ -படக்குழுவின் புதிய அறிவிப்பு!

`பாகுபலி-2' படத்தைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் அடுத்தப் படமான `சாஹோ', பிரமாண்ட பொருள்செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஈவ்லின் ஷர்மா, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு முன்பு 'ரன் ராஜா ரன்' எனும் தெலுங்குப் படத்தை இயக்கிய சுஜீத் ரெட்டி இப்படத்தை இயக்குகிறார். 

சாஹோ

இப்படத்தின் முதல் ஸ்னீக் பீக் வீடியோ சென்ற ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி பிரபாஸ் பிறந்தநாள் அன்று யூ.வி கிரியேஷன்ஸ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்றது. இதைத் தொடர்ந்து படக்குழு மற்றொரு மேக்கிங் வீடியோவை வருகிற மார்ச் 3-ம் தேதியன்று வெளியிடவிருக்கிறது. இந்த வீடியோவில் சண்டைக்காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. 300 கோடி ரூபாய் பொருள்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, ஹைதராபாத், துபாய், ரோமானியா ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளன. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   


[X] Close

[X] Close