சிறுமிக்குப் பாலியல் தொல்லை! பனியன் நிறுவன உரிமையாளர் போக்ஸோ சட்டத்தில் கைது | Pocso case filled against garment company owner at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (25/02/2019)

கடைசி தொடர்பு:16:00 (25/02/2019)

சிறுமிக்குப் பாலியல் தொல்லை! பனியன் நிறுவன உரிமையாளர் போக்ஸோ சட்டத்தில் கைது

திருப்பூரில் 9 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பனியன் நிறுவன உரிமையாளர்

திருப்பூர் வாரணாசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 40 வயதான இவர் வாரணாசிபாளையம் பகுதியிலேயே சொந்தமாக பின்னலாடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்றைக்கு முன்தினம் செந்தில்குமார் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டின் முன்பாக அந்த வீட்டின் உரிமையாளரின் 9 வயது மகள் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்தச் சிறுமியை அழைத்த செந்தில்குமார், அச்சிறுமிக்கு பிஸ்கெட் வாங்கித் தருவதாகக் கூறி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். மேலும், அங்கு வைத்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டிருக்கிறார்.

தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலைப் பற்றிய விவரம் அறிந்திராத சிறுமியும் வெளியே யாரிடமும் சொல்லாமல் வீட்டுக்குச் சென்று படுத்துத் தூங்கியிருக்கிறார். வேலைக்குச் செல்லும் அச்சிறுமியின் பெற்றோரும் வழக்கம்போல பணிமுடிந்து இரவு வீட்டுக்கு வந்து உறங்கிவிட்டார்கள். இந்தநிலையில் இன்றைய தினம் சிறுநீர் கழிப்பதற்காகச் சென்ற சிறுமிக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. வலியால் அலறித் துடித்த சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை அப்படியே முழுவதுமாகச் சொல்லியிருக்கிறார் அச்சிறுமி. இதையடுத்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட செந்தில்குமாரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் சிறுமியின் பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும். பின்னர், சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், செந்தில்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தொடர் விசாரணையை நடத்தி வருகிறார்கள். 

சிறுமிக்குப் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்ட விவகாரம் திருப்பூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


[X] Close

[X] Close