`தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க மட்டும்தான் இருக்கும்!’ - தமிழக அரசுக் கொறடா ராஜேந்திரன் | ADMK alliance will sweep Parliament elections, says TN government whip Rajendran

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (25/02/2019)

கடைசி தொடர்பு:17:45 (25/02/2019)

`தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க மட்டும்தான் இருக்கும்!’ - தமிழக அரசுக் கொறடா ராஜேந்திரன்

`தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க-வைத் தவிர எந்த ஒரு கட்சியும் இருக்காது’ என்று தமிழக அரசின் தலைமைக் கொறடா ராஜேந்திரன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

                                                    

அரியலூர் அண்ணாசிலை அருகில் அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், ``அ.தி.மு.க என்ற சாம்ராஜ்ஜியத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது என்று பல வருடமாகச் சொல்லி வருகிறேன். இந்தத் தேர்தலில் மக்கள் அத நிரூபிப்பார்கள்.

                                                

ஏழை, எளிய மக்களின் தேவைகளை அறிந்து அ.தி.மு.க அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தேர்தல் என்றால் அ.தி.மு.க செய்த தனது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கும். ஆனால், தி.மு.க எந்தப் பொய்யைச் சொல்லி வாக்குகளைக் கேட்கலாம் என நினைக்கும் நிலைமையில் உள்ளது.

                                               

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க இருக்காது. அதற்கான வேலைகளும் நடந்துகொண்டிருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தில் அ.தி.மு.க-வைத் தவிர எந்த ஒரு கட்சியும் இருக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் வகையில் பா.ஜ.க, பா.ம.க மற்றும் பல கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்து வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.

                                             

ஆனால், தி.மு.க கூட்டணிக்கு யார் வருவார்கள் என வலைவிரித்து வாசலை எதிர்பார்த்துள்ளார்கள். எனவே, அ.தி.மு.க நிர்வாகிகள் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெறும் வகையில் பாடுபட வேண்டும்’’ என்று பேசினார்.


[X] Close

[X] Close