`விலையில்லாக் கறவை மாட்டிலும் முறைகேடு பண்ணுறாங்க!'- கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் | People files complaint with sivaganga collector over Free distribution of Milch Cows,Goats & Sheep scheme

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (25/02/2019)

கடைசி தொடர்பு:18:30 (25/02/2019)

`விலையில்லாக் கறவை மாட்டிலும் முறைகேடு பண்ணுறாங்க!'- கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்

அரசு வழங்கும் கறவை மாடு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து புகார் அளித்தனர்.

விலையில்லா கறவை மாடு வழங்கக் கோரி கலெக்டரிடம் மனு


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பாட்டம் கிராமத்தில் தமிழக அரசு வழங்கும் விலையில்லாக் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 86 நபர்களுக்குக் கறவை மாடு வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் பற்றிய விவரங்கள் ஊரில் கிராம சபைக்கூட்டம் மூலமாகவோ ஊர் கூட்டம் மூலமாகவோ தெரிவிக்காமல் ஊரில் உள்ள புரோக்கர்கள் சிலபேர்களை வைத்துக்கொண்டு பயனாளி தேர்வுக்குழுவினர் பயனாளிப் பட்டியலை தேர்வு செய்துள்ளனர். அதிகமான விவசாய நிலம் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள பயனாளிகள் ஆளும் அ.தி.மு.கவினருக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. வறுமைகோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஏழை விவசாயிகள் என உண்மையான பயனாளிகள் யாரும் இத்திட்டத்தில் பயனாளியாக இல்லை.

உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே கறவைமாடு வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஒரு மாட்டின் விலை சுமார் 50,000 ரூபாய் இருக்கும் என்கிறார்கள். இந்நிலையில் வழங்கியிருக்கும் மாடுகள் தரமற்றதாக உள்ளதாக கறவை மாடுகள் வாங்கிய பயனாளிகள் புகார் அளித்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். ``இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து உண்மையான பயனாளிகளுக்கு விலையில்லாக் கறவை மாடு வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close