`எனது வேண்டுகோளை வைகோ ஏற்றுக்கொள்வார்!'- பொன்.ராதாகிருஷ்ணன் | Vaiko will accept my request, says Minister Pon.Rathakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (25/02/2019)

கடைசி தொடர்பு:19:30 (25/02/2019)

`எனது வேண்டுகோளை வைகோ ஏற்றுக்கொள்வார்!'- பொன்.ராதாகிருஷ்ணன்

'பிரதமர், தற்போது மக்கள் கருத்தை அறிய விருப்பப்பட்டு,' பாரத் கெ மன் கி பாத் மோடி கெ சாத்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில், கடிதம் மூலம் மக்கள் ஆலோசனை தெரிவிக்கக் கூறியுள்ளார். அதை மையமாகக்கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "நரேந்திர மோடி பிரதமர் பொறுப்பு ஏற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் என்ற மன் கி பாத் என்ற உரையாடல் நிகழ்ச்சியை வானொலி மூலம் நடத்தியிருக்கிறார். நேற்றுடன் இந்த ஐந்து ஆண்டிற்கான மனதின் குரல் நிகழ்ச்சி நிறைவுபெற்றிருக்கிறது. பிரதமர் நான்கரை ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்களிடம் பேசி கருத்து கேட்டுள்ளார். பிரதமர் தற்போது, மக்கள் கருத்தை அறிவதற்கு விருப்பப்பட்டு, 'உங்கள் யோசனைகளை எனக்குத் தெரிவியுங்கள்' என பாரத் கெ மன் கி பாத் மோடி கெ சாத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில், கடிதம்மூலம் மக்கள் ஆலோசனை தெரிவிக்கக் கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் கருத்து எழுதும் படிவங்களில் ஆலோசனைகளை எழுதிப் போடலாம். இதை டெல்லிக்குக் கொண்டுசென்று மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து, அதை மையமாகக்கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.

பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 8 பெட்டிகள் வைக்கப்படுகிறது. கன்னியாகுமரி சட்டசபைத் தொகுதியில் ஆரல்வாய்மொழி மற்றும் ஈத்தாமொழியிலும், நாகர்கோவில் தொகுதியில் வேப்பமூடு ஜங்ஷன் மற்றும் வடசேரி ஜங்ஷன்களிலும், குளச்சல் தொகுதியில் திங்கள்நகரிலும், பத்மநாபபுரம் தொகுதியில் தக்கலையிலும், கிள்ளியூர் தொகுதியில் புதுக்கடையிலும், விளவங்கோடு தொகுதியில் குழித்துறையிலும் வைக்கப்படும்.

'நாங்கள் பா.ஜ.க கூட்டணில் உள்ள பி டீம் அல்ல, தமிழகத்தில் நாங்கள்தான் ஏ அணி' என கமல் கூறியுள்ளார். 'திரைப்படத்தில் யு சான்றிதழ் ஏ சான்றிதழ் கொடுப்பார்கள். ஆனால், கமல் எந்த அர்த்தத்தில் ஏ அணி எனக் கூறினார் எனத் தெரியவில்லை. எங்கள் கூட்டணி தமிழகக் குடும்பங்களின் கூட்டணி. எங்கள் கூட்டணியில் கேப்டன் வருவார் என முழுமையாக  நம்புகிறேன். குமரி மாவட்டத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைக்க பிரதமர் வருகிறார். அப்போது, பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டாம் என வைகோ-விற்கு எனது வெளிப்படையான வேண்டுகோளை வைக்கிறேன். எனது வேண்டுகோளை வைகோ ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன்.

பொன்.ராதாகிருஷ்ணன்

காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தமிழகம் எத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை கலைஞர் கூடா நட்பு எனக் கூறியிருக்கிறார். தமிழகத்திற்கு எது நல்லது என நாம் புரிந்துகொள்ள வேண்டும். வரும் தேர்தலில் பா.ஜ.க 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணிக் கட்சிகளில் குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் வருவார்கள். மக்களுக்கு இலவசம் வழங்குவதுகுறித்து ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நடைமுறை உண்டு. எங்களைப் பொறுத்தவரை நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால், இலவசமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உங்கள் வீட்டிற்குக் கிடைப்பார் என நம்பி வாக்களியுங்கள்" என்றார்.


[X] Close

[X] Close