விவசாய நிலங்கள் வழியாக பைப்லைன்! - மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் தர்ணா | Farmers protest at tirupur collectorate

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (25/02/2019)

கடைசி தொடர்பு:21:20 (25/02/2019)

விவசாய நிலங்கள் வழியாக பைப்லைன்! - மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் தர்ணா

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் பைப்லைன் திட்டத்தால் 7 மாவட்ட https://www.vikatan.com/news/tamilnadu/150606-cuddalore-farmers-worried-about-water-scarcity-problem.html விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், பைப்லைன்களை நெடுஞ்சாலை ஓரமாக அமைக்க வேண்டும் எனக் கூறி, திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் தர்ணா

பாரத் பெட்ரோலியம் நிறுவனம், ஐ.டி.பி.எல் என்ற பைப்லைன் திட்டத்தின்மூலம் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு பெட்ரோல் கொண்டு செல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சுமார் 294 கிலோ மீட்டர் தூரத்துக்கு, ஆண்டுக்கு 3.52 மில்லியன் டன் அளவில் பெட்ரோல் கொண்டுசெல்வதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. அதில், ஆரம்பகட்டமாக விவசாய நிலங்களை அளவிடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், `விவசாய நிலங்களின் வழியாக பைப்லைன் அமைக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட 7 மாவட்டங்களைச் சேரந்த சுமார்  40 ஆயிரம் விவசாயக் குடும்பங்கள்  பாதிக்கப்படும். ஏற்கெனவே விவசாயிகளின் போராட்டம் காரணமாகத்தான், கெயில் பை்பலைன் அமைக்கும் திட்டமே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அப்படியான சூழலில், தற்போது அதே வழித்தடத்தில் புதியதாக பெட்ரோல் பைப்லைன் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐ.டி.பி.எல் பைப்லைனை விவசாய நிலங்களின் வழியாகப் பதிப்பதைத் தவிர்த்துவிட்டு, அதை நெடுஞ்சாலை ஓரமாகக் கொண்டுசெல்ல வேண்டும்’ எனக்கூறி, திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிப்பதற்காகத் தங்களின் குடும்பத்தினரோடு வந்திருந்தார்கள் விவசாயிகள்.

ஆனால், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க அனைவரையும் காவல் துறையினர்  அனுமதிக்காததால், இருதரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆட்சியரக வளாகத்தின் முன்பாகவே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதன்பிறகே மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.


[X] Close

[X] Close