`எனது குழந்தைகளுக்கு சாதி, மதம் வேண்டாம்!’ - சான்றிதழ் கேட்டு மதுரை ஆட்சியரிடம் மனு | Issue caste, religion less certificate to my children, Madurai Man urges Collector

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (25/02/2019)

கடைசி தொடர்பு:21:00 (25/02/2019)

`எனது குழந்தைகளுக்கு சாதி, மதம் வேண்டாம்!’ - சான்றிதழ் கேட்டு மதுரை ஆட்சியரிடம் மனு

தனது குழந்தைகளுக்கு சாதி, மதம் அற்ற சான்றிதழ் வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெல்டிங் ஊழியர் மனு அளித்துள்ளார்.

சாதி சான்றிதழ் வேண்டாம்

கடந்த சில நாள்களுக்கு முன், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன் பேட்டையைச் சேர்ந்த ம.ஆ.சிநேகா, `சாதி, மதம் அற்றவர்’ என்று திருப்பத்தூர் உதவி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் தாசில்தார் சத்தியமூர்த்தியிடம் சான்றிதழைப் பெற்றார். இதனால், இந்தியாவிலேயே ‘சாதி,சமயம் அற்றவர்’ என்று அரசு அங்கீகாரம் பெற்ற முதல் மனிதர் என்கிற பெருமையைப் பெண் வழக்கறிஞர் ம.ஆ.சிநேகா பெற்றார். இதற்குப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர், தனது இரண்டு குழந்தைகளுக்கும் சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் அளிக்க வேண்டும் என கோரிக்கை  விடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து ராஜசேகரன் கூறுகையில், ``நான் ஒரு வெல்டிங் பட்டறையில் பணி செய்துவருகிறேன். என்னுடைய குழந்தைகள் சாதி, மதம் அற்ற குழந்தைகளாக வளர வேண்டும் என விரும்புகிறேன். அதனால் என்னுடைய கோரிக்கையின் முக்கியம் கருதி சான்றிதழ் வழங்க வேண்டும்’’ என்றார்.


[X] Close

[X] Close