ஆளுநர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு! - குமரி ஆட்டோ ஓட்டுநர் கைது | Kanniyakumari Auto driver arrested for FB Post about TN governor

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (25/02/2019)

கடைசி தொடர்பு:23:00 (25/02/2019)

ஆளுநர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு! - குமரி ஆட்டோ ஓட்டுநர் கைது

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறித்து அவதூறான கருத்துக்களை முகநூலில் பதிவிட்டதாக, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

அப்துல்காதர்

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை, மார்த்தால் பகுதியைச் சேர்ந்தவர், தமிழரசன் என்ற அப்பதுல் காதர் (40). இவர், ஆட்டோ டிரைவராகப் பணிபுரிந்துவருகிறார். அப்துல் காதர் தனது முகநூல் பக்கத்தில், தமிழக ஆளுநர் குறித்து அவதூறான கருத்துகளைக் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பதிவுசெய்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பதிவு, சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. 

கைது

இதையடுத்து, பூதப்பாண்டி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், பூதப்பாண்டி காவல் நிலையத்தில் அப்துல் காதர் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அப்துல் காதர் மீது வழக்குப்பதிவு செய்த பூதப்பாண்டி போலீஸார், இன்று அவரை கைதுசெய்தனர். ஆளுநர் குறித்து முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக ஆட்டோ டிரைவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


[X] Close

[X] Close