``தளபதியாக இருக்கவே தகுதி இருக்கிறது.. தலைமை ஏற்க அல்ல” - ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன் | Minister sengottaiyan speech against dmk leader stalin

வெளியிடப்பட்ட நேரம்: 08:19 (26/02/2019)

கடைசி தொடர்பு:08:19 (26/02/2019)

``தளபதியாக இருக்கவே தகுதி இருக்கிறது.. தலைமை ஏற்க அல்ல” - ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன்

``தளபதியாக இருக்கவே ஸ்டாலினுக்குத் தகுதி உள்ளதே தவிர, தலைமைப் பொறுப்பேற்க அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை” என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருக்கிறார்.

 அமைச்சர் செங்கோட்டையன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அ.தி.மு.க-வின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று திருப்பூரில் நடைபெற்றது. இதில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பேசிய அமைச்சர், "ஸ்டாலின் பேசுவதைக் கேட்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. திருப்பூரில் ஏற்றுமதியாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். எனவே, எதிர்காலத்தில் திருப்பூரில் துறைமுகத்தை விரிவுபடுத்தப்போகிறேன் என அவர் பேசியிருக்கிறார். இது வேடிக்கையாக இருக்கிறது. 400 கிலோ மீட்டருக்கு அப்பால் கடல் இருக்கும் நிலையில், திருப்பூரில் வாழும் மக்களுக்காக துறைமுகத்தை விரிவுப்படுத்தப்போகிறேன் என்று அவர் பேசுகிறார் என்றால், அவர் தளபதியாக இருப்பதற்கு மட்டுமே தகுதியானவரே தவிர, தமிழகத்தில் தலைமைப் பொறுப்பேற்க அவர் தகுதியற்றவர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும்” என்று அவர் பேசினார்.

திருப்பூரில் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படும் என ஸ்டாலின் பேசியதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டதே தவிர, உண்மையில் அவர் அப்படிப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close