தேனி வந்த மாநிலத் தகவல் ஆணையர்… மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை! | The Information Commissioner of came to Theni

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (26/02/2019)

கடைசி தொடர்பு:10:40 (26/02/2019)

தேனி வந்த மாநிலத் தகவல் ஆணையர்… மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகத் தகவல் கேட்டு அதன் தொடர்ச்சியாக மேல்முறையீடு செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணைக்காகத் தேனி வந்திருந்தார் மாநிலத் தகவல் ஆணையர்.

தகவல் ஆணையர்

தமிழக தகவல் ஆணையர் முனைவர் ரா.பிரதாப்குமார். நேற்று(25/02/2019) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாகத் தொடரப்பட்டு மேல்முறையீடு மனுக்கள் தொடர்பாக விசாரணை செய்தார். பின்னர் பல்வேறு துறையின் பொது அலுவலர்களுக்குத் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.

தகவல் ஆணையர்

பின்னர் அவர் பேசியதாவது, ``தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்திற்குள் தகவல் அளிக்கப்படாத 15 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், பொதுப்பணித்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகம் போன்றவற்றில் பதில் அளிக்கப்படாத மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அரசிடமிருந்து தேவையான தகவல்களைப் பெறுவதற்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு இல்லாமல் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனுக்களுக்குக் குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காத அலுவலர்களுக்கு 25,000 ரூபாய் அபராதமும், அந்த அலுவலரை பணிநீக்கம் செய்ய துறைச் செயலருக்குப் பரிந்துரை செய்யும் அதிகாரமும், தகவல் ஆணையாளருக்கு உண்டு” என்றார்.


[X] Close

[X] Close