புதுக்கோட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடற்குதிரை, கடல் பல்லிகள் பறிமுதல்! | Seashells seized in puthukottai

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (26/02/2019)

கடைசி தொடர்பு:11:00 (26/02/2019)

புதுக்கோட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடற்குதிரை, கடல் பல்லிகள் பறிமுதல்!

புதுக்கோட்டை அருகே மீமிசல் கடலோரப் பகுதியில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட கடற்குதிரைகள், கடல் பல்லிகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட கடற்குதிரைகள்

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடலோரப் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட கடற்குதிரை மற்றும் கடல் பல்லிகள் பதுக்கி வைத்திருப்பதாகக்  கடலோரக் காவல்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மீமிசல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, கடலூரைச் சேர்ந்த சசிக்குமார்(49) என்பவர் சந்தேகப்படும் படியாக சாக்குப்பையுடன் அங்கும் இங்கும் திரிந்துள்ளார். 

அவரைப்பிடித்த போலீஸார் அவர் வைத்திருந்த சாக்குப்பையை வாங்கிச் சோதனையிட்டனர். அதில், அரசால் தடைசெய்யப்பட்ட 12 கடற்குதிரைகள், 210 கடல்பல்லிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அனைத்தையும் கைப்பற்றிய போலீஸார் அறந்தாங்கி வனச்சரகரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 


[X] Close

[X] Close