`பா.ம.க-வுடன் கூட்டணி வைப்பது ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம்!’ - தகித்த தினகரன் | TTV Dinakaran slams ADMK for PMK alliance

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (26/02/2019)

கடைசி தொடர்பு:11:30 (26/02/2019)

`பா.ம.க-வுடன் கூட்டணி வைப்பது ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம்!’ - தகித்த தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்புப் பயணம் கடலூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. அங்கு டிடிவி தினகரன் 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் முதற் கட்டமாக கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் மக்களைச் சந்தித்து பேசினார். 

தினகரன்

அப்பொழுது அவர் பேசியதாவது, ``ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக் கூடாது எனப் பலமுறை அறிக்கை விட்டவர் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். அதோடு ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது சிறை சென்றவர், குற்றவாளி எனவும் கூறிவந்தார். அ.தி.மு.க-வின் 2 ஆண்டு ஆட்சி, ஊழல் ஆட்சி எனவும், அது தொடர்பாக கவர்னரைச் சந்தித்து ஊழல் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியவர்.

இவ்வாறு செய்தவர்களுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்திருப்பது, ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம். இனி அந்த அரசு ஜெயலலிதா அரசு எனக் கூறுவதை நிறுத்திகொள்ள வேண்டும். அ.தி.மு.க அரசு மானம்கெட்ட அரசு என விமர்சித்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர்கள் தற்போது கூட்டணி வைத்து இருக்கிறார்களே யார் மானம்கெட்டவர்கள் என விளக்க வேண்டும். ராமதாஸ் அவர்கள் சமூகநீதி போராளி என்று கூறுகிறார்கள் உண்மையிலே சமூகநீதி போராளி ஜெயலலிதா அவர்கள் தான்’’ இவ்வாறு பேசினார். இதைத் தொடர்ந்து அவர் விருத்தாசலத்திலும் கட்சியினருடன் பேசினார். இன்றும் நாளையும் தொடர்ந்து அவர் கடலூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார். 


[X] Close

[X] Close