உதயசூரியன் சின்னத்தில் போட்டி... தி.மு.க கூட்டணியில் ஈஸ்வரன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு! | One seat for Kongu party in DMK alliance

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (26/02/2019)

கடைசி தொடர்பு:13:25 (26/02/2019)

உதயசூரியன் சின்னத்தில் போட்டி... தி.மு.க கூட்டணியில் ஈஸ்வரன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!

நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தி.மு.க கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொங்கு


சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த அம்மம் பாளையத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்தபின் அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, `தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பது குறித்து எங்கள் கட்சியின் 5 பேர் கொண்ட குழுவின் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. 2-ம் கட்ட பேச்சு வார்த்தை இன்னும் 2 நாள்களில் பேசப்பட்டு நல்ல தகவல் தெரிவிக்கப்படும்’’ என்றார்.

கொங்கு


இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன் தலைமையிலான தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவை ஈஸ்வரன் தலைமையிலான நிர்வாகிகள் குழு சந்தித்துப் பேசியது. சந்திப்பின் முடிவில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யவும், அந்தக் கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ஈஸ்வரன் தலைமையிலான குழு சந்தித்தது. கூட்டணி ஒப்பந்தமும் கையொப்பமிடப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close