`12 மாநகராட்சிகளில் கால்நடை பன்முக மருத்துவமனை!’ - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல் | Minister udumalai radhakrishnan opens new felicity in tirupur veterinary hospital

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (26/02/2019)

கடைசி தொடர்பு:20:40 (26/02/2019)

`12 மாநகராட்சிகளில் கால்நடை பன்முக மருத்துவமனை!’ - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தின் 6 மாநகராட்சிகளில் செயல்பட்டு வந்த கால்நடை பன்முக மருத்துவமனை 12 மாநகராட்சிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

திருப்பூர் மாநகராட்சியில் செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவமனை, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கால்நடை பன்முக மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைக் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, மாவட்ட ஆட்சியர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்  செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ``தமிழகத்தில் 6 மாநகராட்சிகளில் செயல்பட்டு வந்த கால்நடை பன்முக மருத்துவமனை, தற்போது திருப்பூர் உள்ளிட்ட 12 மாநகராட்சிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்காகச் சுழற்சி அடிப்படையில் 4 மருத்துவர்கள் பணிபுரிவார்கள். மேலும், அல்ட்ரா ஸ்கேன், டிஜிட்டல் ஸ்கேனர் உள்ளிட்ட நவீன வசதிகளும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் பிரிக்கப்பட்டபோதிருந்தே கட்டட வரைபடத்துக்கு அனுமதி பெற கோவை அல்லது சேலத்திலிருக்கும் நகரமைப்பு அலுவலகத்தை அணுக வேண்டியிருந்தது. தற்போது அந்த நிலையை மாற்றி, திருப்பூரிலேயே அனுமதி பெறக்கூடிய வகையில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றியெல்லாம் எங்களது கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்வார்கள்'' என்று தெரிவித்தார்.


[X] Close

[X] Close