`போலி தங்க நகைகளை எங்க பெயரில் அடகு வைச்சு மோசடி! - சிவகங்கை வங்கியை முற்றுகையிட்ட மக்கள் | sivaganga village people stages protest against bank employee

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (26/02/2019)

கடைசி தொடர்பு:21:20 (26/02/2019)

`போலி தங்க நகைகளை எங்க பெயரில் அடகு வைச்சு மோசடி! - சிவகங்கை வங்கியை முற்றுகையிட்ட மக்கள்

கனரா வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து நகை மதிப்பீட்டாளர், வங்கி மேலாளர் என ரூ.50 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கனரா வங்கி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள லாடனேந்தல் கிராமத்தில் இயங்கி வரும் கனரா வங்கியில் நகை மதிப்பீட்டாளர் செந்தில், வங்கி மேலாளர் பவுன்ராஜ் ஆகியோர் பல்வேறு நபர்களின் பெயர்களில் ரூ.50 லட்சம் மோசடி செய்திருக்கிறார்கள் என்று கூறி பாதிக்கப்பட்ட மக்கள் வங்கியை முற்றுகையிட்டனர்.

நகை மதிப்பீட்டாளர் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் எல்லோரும் நல்ல உறவு முறையில் இருந்திருக்கிறார்கள். அதனடிப்படையில் வங்கிக்கு வருவோரிடம் என் பெயரில் நகைகளை அடகு வைக்க முடியாது. ஆகையால், உங்கள் பெயரில் இந்த நகைகளை அடகு வைத்துக்கொள்கிறேன் என்று சொல்லி பல்வேறு நபர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்திருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. 

`போலி நகைகளை வைத்து எங்களது பெயரில் நகைக் கடன் வாங்கிக் கொண்டு நகை மதிப்பீட்டாளர் செந்தில்குமார் தப்பிவிட்டதாக மேனேஜர் பவுன்ராஜ் எழுதி வாங்கியிருக்கிறார்' என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள். இந்த நிலையில், வங்கி மேலாளர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்திருக்கிறார். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நாளை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரை சந்தித்துப் புகார் கொடுக்க இருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close