`பதிலடி கொடுத்த ராணுவத்துக்கு நன்றி! - சி.ஆர்.பி.எஃப் வீரர் சுப்பிரமணியத்தின் மனைவி நெகிழ்ச்சி #Balakot | Thoothukudi CRPF solider subramaniyan's wife thanks Indian army for balakot attack

வெளியிடப்பட்ட நேரம்: 19:17 (26/02/2019)

கடைசி தொடர்பு:19:35 (26/02/2019)

`பதிலடி கொடுத்த ராணுவத்துக்கு நன்றி! - சி.ஆர்.பி.எஃப் வீரர் சுப்பிரமணியத்தின் மனைவி நெகிழ்ச்சி #Balakot

”புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் மேற்கொண்ட இந்திய ராணுவத்துக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” என மறைந்த சவலாப்பேரி சுப்பிரமணியத்தின் மனைவி கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த சுப்ரமணியன்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எஃப்., படையினர் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூரச் சம்பவத்தில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு, இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

``இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களைத் தண்டிப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த முறையில் தண்டிக்க வேண்டும் என்பதை நமது ராணுவம் முடிவு செய்யும்” என பிரதமர் மோடி கூறினார். இந்த நிலையில், இன்று பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிராஜ் – 2000 ரக போர் விமானம் மூலம் இந்திய ராணுவம் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

கிருஷ்ணவேணி

இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பின் பயிற்சி முகாம்கள் தகர்க்கப்பட்டுள்ளன. இதில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ராணுவத்தின் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். பா.ஜ.க.வினர் வெடி வெடித்தும் இனிப்பு வழங்கியும் இதைக் கொண்டாடி வருகின்றனர். கடந்த 14-ம் தேதி நடந்த தாக்குதலில் உயிரிழந்த 44 சி.ஆர்.பி.எஃப்., வீரர்களில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மற்றும் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரனும் அடக்கம்.

கிருஷ்ணவேணி

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட  குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக சவலாப்பேரி, சுப்பிரமணியத்தின் மனைவி கிருஷ்ணவேணியிடம் பேசினோம். ``சி.ஆர்.பி.எப்.. வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் மனவேதனையும் வலியும் கொடுத்தது. ஆனா, அந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்த வெற்றி, உயிரிழந்த 44 சி.ஆர்.பி.எஃப்., வீரர்களின் உயிர்த்தியாகத்துக்கு கிடைத்த பரிசு. இந்திய ராணுவப் படைக்கு நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கேன்.  இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தும்போது  நமது நாட்டு ராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close