`கமல், ரஜினி ஒண்ணு சேரணும்!’ - விஷால் வியூகமும் உதயநிதியின் கேள்வியும் | vishal wishes rajini, kamal to come together for loksabha elections

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (27/02/2019)

கடைசி தொடர்பு:08:31 (27/02/2019)

`கமல், ரஜினி ஒண்ணு சேரணும்!’ - விஷால் வியூகமும் உதயநிதியின் கேள்வியும்

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிகள், தொகுதிப் பங்கீடுகள், கட்சி உறுப்பினர்களிடமிருந்து விருப்பமனு பெறுதல் என தமிழக அரசியல்  சுறுசுறுப்பாகியுள்ளது. சினிமாவிலிருந்து உறுதியாக அரசியலுக்கு வந்திருக்கும் பிரபலங்களும் தங்கள் பங்கை ஆற்றத் தொடங்கியுள்ளனர். கமல், ரஜினி தேர்தலில் ஒன்றாக இணைய வேண்டும் என விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 

விஷால்

மக்கள் நீதி மய்யம் கட்சி ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து அண்மையில் தன் ட்விட்டர் பக்கத்தில் கமலுக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி.  கமல்ஹாசன், நாடாளுமன்றத் தேர்தலை தனித்து சந்திப்போம் எனத் தனது முடிவையும் அறிவித்திருந்த நிலையில், ரஜினிகாந்த் தனது 40 ஆண்டு கால நண்பர் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த கமல், அதோடு நில்லாமல் 'நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே நாளை நமதே" என்று தேர்தலில் ரஜினியின் ஆதரவு வேண்டும் என சூசகமாக அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி, கமல் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் எனத் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் குறிப்பிட்டது, "எந்த நட்சத்திரத்தின் நிகழ்ச்சிக்கும் இல்லை, எந்த ஒரு திரைப்படத்துக்காகவும் இல்லை, நடிகர் சங்கத்துக்காகவும் இல்லை ரஜினி சார், கமல் சார் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புகிறேன். அது ஒரு நல்ல போட்டியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இஷால்

இதற்கு கமென்ட் செய்த உதயநிதி, நடிகர் சங்க மௌனப் போராட்டத்தில் எடுத்த கமல், ரஜினி போட்டோ கொண்ட மீம் ஒன்றைப் பதிவிட்டு, 'இது எப்போ ?' எனக் கிண்டலாகக் கேள்வி கேட்டுள்ளார்,

உதயநிதி

ஆனால், உதயநிதி மீமில் குறிப்பிட்டதுபோன்று அந்தப் புகைப்படம் ஜெயலலிதாவை ஆதரித்து நடைபெற்ற உண்ணாவிரதம் கிடையாது. அது, நடிகர் சங்க மௌனப் போராட்டத்தில் எடுத்த புகைப்படம். பின்னர், உதயநிதி அந்தப் புகைப்படத்தை நீக்கிவிட்டார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி, `` அது போட்டோஷாப் செய்யப்பட்டது எனத் தெரியாமல் போட்டுவிட்டேன். முதன்முறையாக போட்டோவின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் பதிவிட்டுவிட்டேன். இது என் தவறுதான், இதில் அட்மின் செயல் அல்ல” என பதிவிட்டிருக்கிறார். 

விஷால் ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்து, மனு தாக்கல் செய்து, அது நிராகரிக்கப்பட்டதால் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close