`தமிழகத்தின் முக்கிய இடங்களில் ஆய்வுசெய்ய உள்ளோம்!’ - தொல்லியல்துறை ஆணையர் த.உதயச்சந்திரன் | IAS officer udayachandhiran speaks about keeladi

வெளியிடப்பட்ட நேரம்: 09:05 (27/02/2019)

கடைசி தொடர்பு:09:05 (27/02/2019)

`தமிழகத்தின் முக்கிய இடங்களில் ஆய்வுசெய்ய உள்ளோம்!’ - தொல்லியல்துறை ஆணையர் த.உதயச்சந்திரன்

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பயிலரங்கம், திருப்புவனம் அருகே பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. 
 
கீழடி குறித்து பேசிய உதயசந்திரன்
 
இதில், தொல்லியல்துறை ஆணையர் த.உதயச்சந்திரன் ஐஏஎஸ் பயிலரங்கத்தைத் துவக்கிவைத்துப் பேசும்போது, ``கீழடியில் கிடைத்த தொல்பொருள்களை அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கார்பன் டேட்டிங் அமைப்பிற்கு அனுப்பி ஆய்வுசெய்ததில், சுமார் 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தமிழர் நாகரிகம் என நிரூபணமாகியுள்ளது. 5 -ம் கட்டமாக,  கீழடியில் டிரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம் நிலத்தில் 7 முதல் 10 மீட்டர் ஆழத்திற்குள் உள்ள கட்டடங்கள், தொல்பொருள்கள் இருந்தால் தடயம் கிடைக்கும். 
 
இதுபோன்ற அறிவியல் தரவுகள்மூலம் தமிழகம் முழுவதும் முக்கியமான இடங்களில் ஆய்வுசெய்ய உத்தேசித்துள்ளோம். தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் அருகே அத்திரம்பாக்கம் எனும் இடத்தில் கிடைத்த ஆதிமனிதர்கள் பயன்படுத்திய கற்காலக் கருவிகளை ஆய்வு செய்ததில், 15 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்ற தகவல் கிடைத்தது.  ஆதிச்சநல்லூரில், மிக விரைவில் அரசின் சார்பில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளோம். 
 
பல்வேறு துறை சார்ந்தவர்களும் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது, ஆய்வு மேம்படும்.  ஒவ்வொரு துறை சார்ந்தவர்களின் அறிவும் தொல்லியல் துறைக்கு தேவைப்படுகிறது. இந்த ஆய்வுகளைச் சான்றுகளோடு ஒப்பிட்டு, தமிழர்களின் பழமையையும் தொன்மையையும் வெளிப்படுத்தும் முயற்சிகளில் தொல்லியல் துறை ஈடுபடும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close