``விதிமுறைகளை மீறிய கட்டடங்கள்!” -சீல் வைக்கும் பணியில் கொடைக்கானல் நகராட்சி | Kodaikanal Infringement Buildings are sealed

வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (27/02/2019)

கடைசி தொடர்பு:10:55 (27/02/2019)

``விதிமுறைகளை மீறிய கட்டடங்கள்!” -சீல் வைக்கும் பணியில் கொடைக்கானல் நகராட்சி

கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், 1993-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாஸ்டர் பிளான் கட்டுமான வரைமுறையை மீறி ஆயிரக்கணக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை உச்ச நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுப்படி, கடந்த மாதம் நகராட்சி நிர்வாகத்தினர் சீல் வைத்து, மின் இணைப்பைத் துண்டித்தனர். மேலும் 1,415 கட்டடங்களுக்கு சீல் வைத்து மார்ச் 11-ம் தேதி அறிக்கை அளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், 'புதிய மாஸ்டர் பிளான் அமல்படுத்தும் வரை கட்டடங்களுக்கு சீல் வைக்கத் தடை விதிக்க வேண்டும்' எனச் சிலர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள், குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், சிறிய உணவு விடுதிகள், சிறிய பழம் மற்றும் காய்கறிக் கடைகள், பேக்கரிகள் போன்றவற்றிற்கு தற்போதைய நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. அவற்றை சீல் வைக்கக் கூடாது. வழிபாட்டுத் தலங்கள், லாட்ஜ், காட்டேஜ்களில் விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்' என உத்தரவிட்டது. 

 இதைத் தொடர்ந்து, நேற்று காலை முதல் கொடைக்கானலில் விதிமீறிய கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது. சீல் வைக்கப்பட உள்ள கட்டடங்கள் குறித்த விவரங்கள், நகராட்சி அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் 258 கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணியை முடிக்கும் நிலையில் நகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விதிமீறிய கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணியால் கொடைக்கானலில் பரபரப்பு நிலவுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close