``ஜோதிகா என்னை ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க!" - காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா | costume designer poornima talks about jyothika friendship

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (27/02/2019)

கடைசி தொடர்பு:12:50 (27/02/2019)

``ஜோதிகா என்னை ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க!" - காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா

பூர்ணிமா
 

பிரபல சினிமா ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா, நடிகை ஜோதிகாவின் புதிய படத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அந்தப் பட அனுபவம் மற்றும் ஜோதிகாவுடனான நட்புகுறித்துப் பேசுகிறார், பூர்ணிமா. 

``கல்யாண் இயக்கத்துல ஜோதிகா அண்ணி நடிக்கிற புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கலை. அப்படத்தின் ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு. ஜோதிகா அண்ணிக்கு, அவருடைய மற்ற படங்களில் பார்த்திராத வித்தியாசமான கேரக்டர் மற்றும் கெட்அப். என்ன மாதிரியான ரோல், காஸ்ட்யூம்னு இப்போதைக்குச் சொல்ல முடியாது. படத்தில் காமெடி நிறைய இருக்கும். ஷூட்டிங் டைம்ல விழுந்து விழுந்து சிரிச்சுகிட்டு இருந்தோம். ஜோதிகா அண்ணியும் நானும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஷூட்டிங்ல அவங்க என்னை ரொம்பவே கிண்டல் பண்ணுவாங்க. என்னோட காஸ்ட்யூம் வேலைகள் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்களும் நிறைய ஐடியாஸ் சொல்லுவாங்க.  

பூர்ணிமா

நடிகர் சூர்யா அண்ணனின் தங்கை பிருந்தாவும் நானும் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ். எங்க நட்பினால், இரு குடும்பத்தினரும் நண்பர்களானோம். ஜோதிகா அண்ணியின் திருமணத்துக்குப் பிறகுதான் நாங்க இருவரும் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். தொடர்ந்து, அண்ணியின் பல படங்கள்ல காஸ்ட்யூம் டிசைனரா வேலைபார்த்திருக்கேன். இதெல்லாம் எதேச்சையாக அமைந்ததுதான். எங்களுக்குள் இருக்கும் நட்பு, எந்த வகையிலயும் சினிமா தொழிலைப் பாதிக்காது. விரைவில், சூர்யா அண்ணன் படத்திலும் வேலை செய்யப்போறேன்."


[X] Close

[X] Close