பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பில் சூரப்பா விலகல் - கவுன்சிலிங்கில் சிக்கல்! | anna university vice chancellor surappa resigns his tnea secretory post

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (27/02/2019)

கடைசி தொடர்பு:18:01 (27/02/2019)

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பில் சூரப்பா விலகல் - கவுன்சிலிங்கில் சிக்கல்!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா பதவி விலகியுள்ளார். 

சூரப்பா

பொறியியல் படிப்புக்கான இன்ஜினீயரிங் கவுன்சிலிங் தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து ஆண்டுதோறும் நடந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கவுன்சிலிங்கை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் நடைபெற்றுவந்தது. அண்ணா பல்கலைக்கழகத் தலைவரே இந்த மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பையும் கூடுதல் பொறுப்பாக வகித்து வந்தார்கள். இந்தநிலையில், இன்று இந்த மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா பதவி விலகியுள்ளார். அதற்கான கடிதத்தை அவர் உயர் கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழகமே நடத்துவதால் நிர்வாக ரீதியாகச் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், கல்வியியல் ரீதியான முடிவுகள் எடுப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது என்பதே பதவி விலகியதற்கான காரணங்களாக முன்வைத்துள்ளார் சூரப்பா. ஆனால், உயர்கல்வி செயலாளராக இருந்த மங்கத் ராம் சர்மாவை பொறியியல் கலந்தாய்வுக்கான ஒருங்கிணைப்பாளராக தமிழக அரசு அண்மையில் நியமித்தது. இந்த நியமனத்தால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே சூரப்பா பதவி விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது. சூரப்பா பதவி விலகியதால் வரும் கல்வியாண்டில் இன்ஜினீயரிங் கவுன்சிலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவதில் சிக்கல் எழ வாய்ப்புள்ளது எனக் கல்வியாளர்கள் கூறி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close