நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது! - திருவாரூர் மக்கள் மகிழ்ச்சி | new bus stand opend in thiruvarur

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (27/02/2019)

கடைசி தொடர்பு:17:00 (27/02/2019)

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது! - திருவாரூர் மக்கள் மகிழ்ச்சி

8 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாகத் திறந்து வைத்தார்.

திருவாரூர்

திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திருவாரூர் பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. பேருந்து நிலையம் சாலையிலேயே உள்ளதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதனால் புதிய பேருந்து நிலையத்தைக் கட்டித்தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் திருவாரூர் அருகே விளமல் என்ற இடத்தில் கடந்த 2010 ம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு 11.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக 2012 ம் ஆண்டு முதற்கட்டமாக 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. பின், நிதிப் பற்றாக்குறையால் பேருந்து நிலையத்தின் பணிகள் முடங்கின.

நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்வதற்காக மேலும் 7,36,00,000  ஒதுக்கப்பட்டு மொத்தமாக 13,36,00,000 ரூபாய் பேருந்து நிலையத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டு பேருந்து நிலைய பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் நிறைவு பெற்றதால் அ.தி.மு.கவினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக புதிய பேருந்து நிலையத்தைத் திறப்பதற்காக பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார். பல வருடங்களாகக் காத்திருந்த திருவாரூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.


[X] Close

[X] Close