``போர்ச்சூழலைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!’’ - திருமாவளவன் | Thirumavalavan urges government to take necessary action to tackle tension prevailing India - pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (27/02/2019)

கடைசி தொடர்பு:19:30 (27/02/2019)

``போர்ச்சூழலைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!’’ - திருமாவளவன்

திருமாவளவன்

``இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர்ச்சூழலைக் தவிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

``இந்தியாவை மீட்போம்… தமிழகத்தைக் காப்போம்’’ என்கிற முழக்கத்தை முன் வைத்து, கோவையில் இன்று அரசியல் எழுச்சி மாநாட்டை நடத்த உள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட கூட்டணிக்கட்சித் தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக, கோவை வந்த திருமாவளவன், விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, ``புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய விமானப் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதன் மூலம் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. நம் நாட்டின் பாதுகாப்புக்காக நடத்தப்பட்ட தாக்குதல் ஆறுதல் அளித்தாலும், இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் அபாயம் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. எனவே, இரு நாடுகளுக்கு இடையேயான போராக இது மாறக் கூடாது. பதற்றத்தைத் தவிர்க்கவும் போர்சூழலைத் தவிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றவர், ``தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. உரிய நேரத்தில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடக்கும். கூட்டணி பேச்சுவார்த்தையில் தொய்வு எதுவுமில்லை’’ என்றார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close