`அபினந்தனை நான்தான் தூக்கி வளர்த்தேன்; மீட்டுக்கொடுங்கள்’ - சென்னை உறவினர் கண்ணீர்! #video | please rescue pilot abinanthan says his relation in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (27/02/2019)

கடைசி தொடர்பு:19:04 (27/02/2019)

`அபினந்தனை நான்தான் தூக்கி வளர்த்தேன்; மீட்டுக்கொடுங்கள்’ - சென்னை உறவினர் கண்ணீர்! #video

பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிய இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானி அபினந்தனை நான்தான் தூக்கி வளர்த்தேன். அவரை இந்திய அரசு மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கண்ணீர்மல்க அவரின் உறவினர் குந்தநாதன் கூறினார்.  

விமானி அபினந்தன்

பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிய இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானி அபினந்தனின் குடும்பம் சென்னையை அடுத்த சேலையூர் மாடம்பாக்கத்தில் உள்ளது. தாம்பரம் விமானப்படை பயிற்சி தளத்தில் கடந்த 2004-ம் ஆண்டு பயிற்சி பெற்றவர் அபினந்தன். சென்னையைச் சேர்ந்த அவரின் உறவினர் குந்தநாதனிடம் பேசினோம். 

என்னுடைய மாமா மகன்தான் அபினந்தன். அவரைப் பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து வைத்திருப்பதாக டிவியில் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். அவரின் அப்பாவும் பைலட்தான். நான் தூக்கி வளர்த்த பையன்தான் அபி. நாட்டுக்காகச் சேவை செய்துவந்தான். அவனை இந்திய அரசு மீட்டுக் கொடுக்க வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வருகிறது. 

அபினந்தன் உறவினர்

தற்போது அபினந்தனின் குடும்பம் டெல்லியில் இருக்கிறது. தகவல் கிடைத்ததும் அவரின் உறவினர்களிடம் போனில் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர்கள் எடுக்கவில்லை. அவரின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், திருப்பணவூர். காஞ்சிபுரத்திலிருந்து 18 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது. சென்னை மாடம்பாக்கத்தில்தான் அபினந்தன் இருந்தார். அபினந்தனை நல்லபடியாக மீட்டுக்கொடுங்கள். அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்’’ என்றார் கண்ணீருடன்.

 

 


[X] Close

[X] Close