`தி.மு.க ஊராட்சி சபைக் கூட்ட நாடகங்களை மக்கள் அறிவார்கள்!’ - தமிழிசை | Peoples are well known in DMK panjayat saba meeting says thamilisai

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (27/02/2019)

கடைசி தொடர்பு:20:50 (27/02/2019)

`தி.மு.க ஊராட்சி சபைக் கூட்ட நாடகங்களை மக்கள் அறிவார்கள்!’ - தமிழிசை

கிராம சபைக் கூட்டங்களில் தி.மு.க நடந்தும் நாடகங்களை மக்கள் நன்றாக அறிவார்கள் என, பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழிசை

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, கன்னியாகுமரியில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் விழா குறித்த ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற பரபப்புரைக்காக வரும் மார்ச் 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு வருகிறார். அதையடுத்து வரும் மார்ச் 6-ம் தேதி கூட்டணிக் கட்சிகளுக்காக, தாம்பரத்தில் பரப்புரை செய்கிறார். பா.ஜ.க, அ.தி.மு.க, பா.ம.க கூட்டணி இந்தத் தேர்தலில் பிரமாண்ட  வெற்றிபெறும். இது ஒரு மெகா வெற்றிக் கூட்டணி. எதிர்க் கூட்டணி பற்றியோ, புதிதாகச் சேரும் கூட்டணி பற்றியோ எங்களுக்குக் கவலை இல்லை.

எங்கள் கட்சியை மதவாத கட்சி எனத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க-தான், மதத்தின் பெயரை வைத்துள்ள கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, தங்கள் கூட்டணியை மதச்சார்பற்ற கூட்டணி என்கிறார்கள். ஆனால், மக்கள் இதை நம்ப மாட்டார்கள். 
தே.மு.தி.க-வும் புதிய தமிழகமும் எங்கள் கூட்டணியில் இணைவார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்கள் இருவரும் சமூக அக்கறை உள்ளவர்கள். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள். அதற்கான கூட்டணி எங்கள் கூட்டணிதான் என்பதால், அவர்கள் இருவரும் மீண்டும் இணைவர்கள்.

முதல் முறையாக, கிராமங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, யார் ஆட்சிக்கு வருவார்கள் என தனக்குத் தெரிவதாக ஸ்டாலின் தெரிவிக்கிறார். அவர்களின் கிராமசபைக் கூட்டத்துக்கு எப்படிக் கூட்டம் சேர்க்கிறார்கள், எப்படிப் பேச வைக்கிறார்கள் என எங்களுக்குத் தெரியும். அவர்களின் நாடகத்தை மக்கள் நன்றாக அறிவார்கள். நாடாளுமன்றத் தேர்தலோடு, 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. அதில், அ.தி.மு.க-தான் போட்டியிடும். கூட்டணிக் கட்சிகள் அதற்கு ஆதரவு தரும். வைகோவின் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டணிகளிடம் மதிப்பு இல்லை. வைகோவின் கறுப்புத் துண்டுக்கும் கொடிக்கும் கருத்துக்கும் மக்களிடம் மதிப்பில்லை. வைகோ மக்களால் நிராகரிக்கப்படுவார். எங்கள் கட்சிக்கு 5 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பா.ஜ.க சொல்லும் இடத்தில் நான் போட்டியிடுவேன்’’ என்றார்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close