`விமானி அபிநந்தன் யார்?’ - வெளியானது தகவல்கள்! | pilot abhi nandan details revels

வெளியிடப்பட்ட நேரம்: 20:59 (27/02/2019)

கடைசி தொடர்பு:13:07 (28/02/2019)

`விமானி அபிநந்தன் யார்?’ - வெளியானது தகவல்கள்!

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர். அபிநந்தனின் பூர்வீகம் திருவண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அபிநந்தன் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. 

அபினந்தன்

இவரின் முழுப்பெயர் அபிநந்தன் வர்த்தமான். இவரின் சர்வீஸ் எண் 27981. விமானப் படையில் விங் கமாண்டர் விமானியாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் 173 கோர்ஸ் பிரிவைச் சேர்ந்தவர். இவரின் அப்பாவின் பெயர் வர்த்தமான். அவரும் விமானியாக இருந்தவர்தான்.

அபினந்தனின் சென்னை வீடு

அபிநந்தன் 2004-ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் இணைந்து சேவையாற்றி வருகிறார். அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர். இவர் படித்தது, வளர்ந்தது, விமானப்படைக்கு முதற்கட்ட பயிற்சி எடுத்தது எல்லாம் சென்னையில்தான். 

வர்த்தமான்

அதன்பின் வடமாநிலங்களில் பல இடங்களில் ராணுவ முகாம்களில் பணியாற்றியிருக்கிறார். அபிநந்தனின் பூர்வீகம் திருவண்ணாமலை அருகே திருப்பனவூர் கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அபிநந்தன் குடும்பத்தினர் சென்னை மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.


[X] Close

[X] Close