`நிர்மலா தேவியின் ஜாமீனுக்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்க என்ன காரணம்?!’- நீதிமன்றம் கேள்வி | Madurai HC bench Stays nirmala devi case proceedings in Srivilluputhur court

வெளியிடப்பட்ட நேரம்: 21:22 (27/02/2019)

கடைசி தொடர்பு:21:22 (27/02/2019)

`நிர்மலா தேவியின் ஜாமீனுக்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்க என்ன காரணம்?!’- நீதிமன்றம் கேள்வி

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான முறையில் பயன்படுத்த முயற்சித்த புகாரில் பேராசிரியை நிர்மலா தேவி கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் இருந்து வருகிறார். 

நிர்மலாதேவி

இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி, நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் குற்றவாளி என்று  குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். பலமுறை கேட்டும் நிர்மலாதேவிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உதவிப்பேராசிரியர் முருகன், கருப்பச்சாமிக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்தநிலையில், சி.பி.சி.ஐ.டியின் விசாரணை நியாயமாக நடைபெறவில்லை. அதனால், வழக்கை  சி.பி.ஐக்கு மாற்றும்படி நிர்மலாதேவி தாக்கல் செய்திருந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நிர்மலாதேவி தரப்பு வழக்கஞரின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ``சி.பி.சி.ஐ.டி. விசாரணை திருப்தியாக இல்லை. வழக்கில் உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இவர்கள் 3 பேரை மட்டும் மையமாக வைத்து  வழக்கு நடைபெற்று வருகிறது. கொலை குற்றவாளிவளுக்குக் கூட ஜாமின் கொடுக்கும்போது, நிர்மலா தேவிக்கு ஏன் ஜாமின் வழங்கவில்லை. அவருடைய ஜாமீனுக்கு சி.பி.சி.ஐ.டி. எதிர்ப்பு தெரிவிக்க் காரணம் அச்சமா’’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். இந்த விவகாரத்தில் அரசு தரப்பு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close