`கடைசி 6 ஓவர்களில் 91 ரன்கள்; கோலி - தோனி கிளாசிக் பாட்னர்ஷிப்!’ - ஆஸி-க்கு 191 ரன்கள் இலக்கு #INDvAUS | india scores 190 runs against australia

வெளியிடப்பட்ட நேரம்: 20:42 (27/02/2019)

கடைசி தொடர்பு:20:49 (27/02/2019)

`கடைசி 6 ஓவர்களில் 91 ரன்கள்; கோலி - தோனி கிளாசிக் பாட்னர்ஷிப்!’ - ஆஸி-க்கு 191 ரன்கள் இலக்கு #INDvAUS

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 190 ரன்கள் குவித்துள்ளது. 

இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதால் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது. அதன்படி இந்தப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவை பேட்டிங் செய்யப் பணிந்தது. இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக தவான் களம் கண்டார். அதன்படி தவான் - கே.எல்.ராகுல் இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கினர். 

இந்தியா

ஓப்பனிங்கில் தவான் சொதப்ப, முதல் போட்டியைப்போல இன்றும் கே.எல்.ராகுல் அதிரடி காட்டினார். ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிக்ஸர்களாக விளாசிய அவர், 47 ரன்களில் அவுட் ஆகி அரை சதம் அடிக்கும் வாய்ப்பைப் பறிகொடுத்தார். இவரை அடுத்து வந்த ரிஷப் பான்ட் ஏமாற்றினாலும் கேப்டன் கோலி மற்றும் தோனி இணை அணியை மீட்டெடுத்தது. இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை பவுண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவும் விளாசினர். கடைசிக் கட்டத்தில் இருவரும் அதிரடியாக ஆட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இருப்பினும் கடைசி ஓவரில் தோனி அவுட் ஆனார் இதன்மூலம் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 191 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விராட் கோலி 65 ரன்கள் எடுத்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close