மாற்றுத்திறனாளி மாணவரைத் தாக்கிய ஆசிரியர்! - சர்ச்சையில் கும்பகோணம் தனியார் பள்ளி | Kumbakonam school teacher attacks student, parents files police complaint

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (27/02/2019)

கடைசி தொடர்பு:10:35 (28/02/2019)

மாற்றுத்திறனாளி மாணவரைத் தாக்கிய ஆசிரியர்! - சர்ச்சையில் கும்பகோணம் தனியார் பள்ளி

கும்பகோணத்தில், மாற்றுத்திறனாளி மாணவனை ஆசிரியை அடித்ததால் படுகாயமடைந்த மாணவன், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த மாணவர்

கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். டிரைவரான இவருக்கு வாய்பேச முடியாத மாற்றுதிறன்கொண்ட புருஷோத்தமன் என்ற மகன் உள்ளார். கும்பகோணம், ஸ்ரீநகர் காலனியில் உள்ள தனியார் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில், புருஷோத்தமன் 5-ம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த 22-ம் தேதி, புருஷோத்தமனை பள்ளிஆசிரியை அடித்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர்கள், ஆசிரியையிடம் `இனிமேல் அடிக்காதீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று புருஷோத்தமனை பள்ளி ஆசிரியை பலமாக கம்பால் அடித்துள்ளார். இதனால் உடலில் தடிப்பு ஏற்பட்டு சிவந்து போனதுடன் காய்ச்சலும் ஏற்பட்டது. இதனால் பயந்துபோன ராஜேந்திரன், மகன் புருஷோத்தமனை நேற்று இரவு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். மேலும், இதுகுறித்து  ராஜேந்திரன்,  கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close