`அரசுப் பள்ளியில் நடந்த சாதிரீதியிலான தாக்குதல்’ - நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மறியல் | student relatives protest against teacher and few students

வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (28/02/2019)

கடைசி தொடர்பு:08:45 (28/02/2019)

`அரசுப் பள்ளியில் நடந்த சாதிரீதியிலான தாக்குதல்’ - நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மறியல்

மறியல்

இராஜபாளையம் அருகே, பள்ளி மாணவிகளை சாதிரீதியாகத் தாக்கிய சக மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் கிராமத்தில், சேவுகபாண்டியன் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்நிலையில், சில நாள்களுக்கு முன் இருபிரிவு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு குறிப்பிட்ட சாதி மாணவிகளான இசக்கிகலா, பாண்டிசெல்வி ஆகியோரை மற்றொரு சாதி மாணவிகள் தரக்குறைவாகப் பேசியதுடன், தாக்கியதாகவும் தெரிகிறது.

மறியல்

இதுகுறித்து வகுப்பு ஆசிரியரிடம் மாணவிகள் எடுத்துக்கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், போதிய நடவடிக்கை எடுக்காத ஆசிரியரைக் கண்டித்தும், அவதூறாகப் பேசிய மாணவிகளைக் கைதுசெய்யக் கோரியும், இராஜபாளையம்- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் சுமார் 300 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல்

சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர், வட்டாட்சியர் இராமச்சந்திரன், மாவட்டக் கல்வி அலுவலர் சின்னதுரை, இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


[X] Close

[X] Close