தேர்வு பயமா... 104-க்கு கால் பண்ணுங்க! - மாணவர்களுக்கு அறிவுரை | 104 service for students

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (28/02/2019)

கடைசி தொடர்பு:17:47 (28/02/2019)

தேர்வு பயமா... 104-க்கு கால் பண்ணுங்க! - மாணவர்களுக்கு அறிவுரை

ப்ளஸ் டூ பொதுத்தேர்வுகள் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் மாணவர்கள் தேர்வை எந்தவித பதற்றமும் பயமும் இல்லாமல் எழுதவும், மனஅழுத்தம் போக்கவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை 104 சேவைக்கு ஏற்பாடு செய்துள்ளது.  

தேர்வு எழுதும் மாணவர்கள்


பள்ளி மாணவர்கள் தங்களின் குடும்பச் சூழல் காரணமாகப் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இதனால் அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. குறிப்பாக ப்ளஸ் டூ, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில் பயம் உண்டாகிறது. இதனால் உரிய மதிப்பெண்கள் எடுக்க முடியாமல் தோல்வி அடைகின்றனர். 

இந்தச் சூழலை எளிதாக எதிர்கொள்ள அவர்களுக்கு மனநல ஆலோசனை (கவுன்சலிங்) வழங்க தமிழக பள்ளிக் கல்வித்துறை நடமாடும் ஆலோசனை மையங்களை அமைத்துள்ளது. தற்போது தமிழகத்தில் 10 இடங்களில் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  

சேவை

மாணவர்களின் தேர்வு பயத்தை எப்படிப் போக்குவது என்பது குறித்து மத்திய இடைநிலைக் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்பில் ஏற்கெனவே ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த 104 சேவை மையத்தை மாணவர்கள், பெற்றோர்கள்  தொடர்புகொண்டால் பொதுத் தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது, எழுதுவது, கேள்விகளுக்கு விடை அளிப்பது உள்ளிட்ட சந்தேகங்களுக்கு ஆசிரியர்களும், சிக்கலான பிரச்னைகளுக்கு மனநல மருத்துவர்களும் தகுந்த ஆலோசனைகளை வழங்குவார்கள். 


[X] Close

[X] Close