யார் யாருக்கு எந்தத் தொகுதிகள்... மார்ச் 2-ல் வெளியாகிறது பா.ஜ.க பட்டியல்? | bjp soon release lok sabha election candidate list

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (28/02/2019)

கடைசி தொடர்பு:10:17 (16/03/2019)

யார் யாருக்கு எந்தத் தொகுதிகள்... மார்ச் 2-ல் வெளியாகிறது பா.ஜ.க பட்டியல்?

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் களமிறங்க உள்ள வேட்பாளர்களின் அதிகாரபூர்வ பட்டியல் மார்ச் 2-ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.

பாஜக கூட்டணி கட்சிகள்

தமிழகத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க-வுடன் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்தக் கூட்டணியில் இதுவரை பா.ம.க மட்டுமே இணைந்துள்ளது. பா.ஜ.க-வுக்கு ஐந்து தொகுதிகள்  அ.தி.மு.க ஒதுக்கியுள்ளது. `அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க, புதிய  தமிழகம் போன்ற கட்சிகளும் இணைய உள்ளதாக' அந்தக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க பிரமுகர் தெரிவித்தார். ஆனால், தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில், அந்தக் கட்சி விருப்ப மனுக்களை வாங்கி வருகிறது. இந்த நிலையில், இன்னும் அ.தி.மு .க - பா.ஜ.க  கூட்டணி முழுமை அடையாத  நிலையில் பா.ஜ.க வேட்பாளர்களின் அதிகாரபூர்வ பட்டியல் வரும் 2-ம் தேதி  வெளியாகும் என்று பா.ஜ.க-வில் உள்ள முக்கிய வட்டாரம்  தெரிவிக்கிறது.

``தூத்துக்குடியில் தமிழிசை செளந்தரராஜன், கோவையில் சி.பி ராதாகிருஷ்ணனும் தேர்வு செய்யப்பட்டுள்னர். அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் ராஜா, வட சென்னையில் வானதி ஸ்ரீனிவாசன், சக்ரவர்த்தி , என்.எஸ்.பிரசாத் ஆகிய மூன்று பேரின் பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வடசென்னை தொகுதிக்கான வேட்பாளர் யார்  என்பது முடிவானதும்  பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் வரும் 2-ம் தேதி அறிவிக்கப்படும்" என்று அந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.


[X] Close

[X] Close