500 மீட்டர் வரை படம் பிடிக்கும்; குற்றவாளிகள் தப்ப முடியாது! - சிசிடிவியுடன் வருகிறது போலீஸ் ஜீப் | Cuddalore Police installs CCTV Camera in patrol jeeps

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (28/02/2019)

கடைசி தொடர்பு:18:40 (28/02/2019)

500 மீட்டர் வரை படம் பிடிக்கும்; குற்றவாளிகள் தப்ப முடியாது! - சிசிடிவியுடன் வருகிறது போலீஸ் ஜீப்

கடலூர் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. கடலூர் எம்.பி அருண்மொழித்தேவன் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் வழங்கினார். இந்த நிதியில் தற்பொழுது 90 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

போலீஸ் ஜீப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி

மேலும் போலீஸ் அதிகாரிகள் ஜீப்பில் மொபைல் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் இடங்களில், முக்கிய பாதுகாப்புப் பணியிலும் குற்றம் நடைபெறும் இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்ட ஜீப்புகள் நிறுத்தப்பட்டு நிகழ்வுகள் பதிவு செய்யப்படும். இதில் உள்ள கேமரா சுமார் 500 மீட்டர் வரை சம்பவங்களைப் படம் பிடிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேமராவில் பதிவாகும் படங்களை எஸ்.பி உட்பட போலீஸ் உயர் அதிகாரிகள் தங்கள் மொபைல் போனில் நேரடியாகப் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட எஸ்.பி. சரவணன் தொடங்கிவைத்தார்

இதைக் கடலூர் மாவட்ட எஸ்.பி சரவணன் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், ``கடலூர் மாவட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டதில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் ஆன்லைனில் புகார் அனுப்புவது மற்ற மாவட்டங்களைவிட அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் விபத்து ஏற்படும் 71 இடங்கள் கண்டறியப்பட்டு ஒளிரும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறினார். 


[X] Close

[X] Close