இரவு நேரத்தில் டிரைவர்களுக்கு சூடான டீ, காபி! - விபத்தைத் தடுக்க போலீஸ் புதுமுயற்சி | Cuddalore Police provide tea, coffee to drivers

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (28/02/2019)

கடைசி தொடர்பு:19:30 (28/02/2019)

இரவு நேரத்தில் டிரைவர்களுக்கு சூடான டீ, காபி! - விபத்தைத் தடுக்க போலீஸ் புதுமுயற்சி

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க, இரவு நேரத்தில் வாகன ஓட்டுநர்களுக்கு சூடான டீ, காபியை காவல்துறையினர் கொடுத்தனர். 

பஸ் டிரைவருக்கு டீ கொடுக்கும்  போலீஸ்

கடலூர் மாவட்டத்தில் வாகன விபத்தைத் தவிர்க்கவும், குற்ற நடவடிக்கைகளைக் குறைக்கவும் மாவட்ட எஸ்.பி சரவணன் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் தொடர்ந்து ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் டிரைவர்கள் நள்ளிரவில் தூக்கத்தில் வாகனங்களை இயக்குவதுதான் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, டிரைவர்களின் தூக்கத்தைப் போக்கி, அவர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் இரவு நேரத்தில் டீ, காபி இலவசமாக வழங்க மாவட்ட எஸ்.பி சரவணன் உத்தரவிட்டார்.

வாகன ஓட்டிகளுக்கு டீ கொடுக்கும் காவல்துறையினர்

இந்த நிலையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சென்ற கார், பேருந்து, லாரி போன்ற வாகனங்களை நிறுத்திய போலீஸார் அவர்களுக்குச் சூடாக டீ, காபி வழங்கினார்கள். போலீஸாரின் இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இப்பணி தொடர்ந்து நடைபெறும் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர். காவல் துறையின் இந்த முயற்சி வாகன ஓட்டிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 


[X] Close

[X] Close