`பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க இணைவது உறுதி!’ - அடித்துச் சொல்லும் பா.ஜ.க | DMDK will join BJP alliance, hopes BJP cadres

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (28/02/2019)

கடைசி தொடர்பு:10:19 (16/03/2019)

`பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க இணைவது உறுதி!’ - அடித்துச் சொல்லும் பா.ஜ.க

 தே.மு.தி.க - பா.ஜ.க

டைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலை சந்திக்க உள்ளது. இந்தக் கூட்டணியில் பா.ம.க இணைந்துவிட்டநிலையில் தே.மு.தி.க இணைந்துவிட்டால் கூட்டணியின் பலம் அதிகரிக்கும் என்று பா.ஜ.க கருதுகிறது. ஆனால், அ.தி.மு.க-வுக்கோ தே.மு.தி.க வருவதில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், பா.ஜ.க-வின் உந்துதலால் பேச்சுவார்த்தை நடத்தியது. பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் போன்று தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று தே.மு.தி.க கூறியதாகத் தெரிகிறது.

ஆனால், அதைப் பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் ஏற்க மறுத்துவிட்டது என்கிறார்கள். சீட் தொடர்பான பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், அ.தி.மு.க-வில் உள்ள இரண்டு அமைச்சர்களின் கமென்ட் தே.மு.தி-க-வை கடுப்பேற்றியதால் அ.தி.மு.க-வுடன் - தே.மு.தி.க கூட்டணி வைக்கத் தயங்குவதாகக் கூறுகின்றனர். இந்தநிலையில், இந்தச் சூழலை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட தி.மு.க, தே.மு.தி.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் தி.மு.க - தே.மு.தி.க  கூட்டணி உறுதியாகிவிடும் என்று அந்தக்  கூட்டணியில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் பேசி வருகின்றனர்.

தே.மு.தி க - தி.மு.க-வுடன் கைகோக்கக் கூடாது என்றும், அதை எப்படியும் முறியடித்து விட வேண்டும் என்றும் பா.ஜ.க கணக்குப் போடுவதாகக் கூறுகின்றனர். இதுகுறித்து பா.ஜ.க பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். ``ஒரு ராஜ்யசபா சீட் காரணமாகக் கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் போனது. ராஜ்ய சபா சீட் வேண்டும் எனத் தே.மு.தி.க  பிடிவாதம் பிடிக்கிறது. அதேபோன்று எங்களாலும் தே.மு.தி.க கேட்பதைத் தர முடியாது. அதற்குப் பதிலாக வேறு வகையில் திருப்திப்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம். அதனால் உறுதியாக தே.மு.தி.க  பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்கு வருவது உறுதி’’ என்றார். 


[X] Close

[X] Close