`போலீஸ் கஸ்டடியில் முகிலன் இல்லை!’ - ஹென்றி திபேன் | mukilan not in police custody says human rights activist Henri Tiphagne

வெளியிடப்பட்ட நேரம்: 19:44 (28/02/2019)

கடைசி தொடர்பு:19:44 (28/02/2019)

`போலீஸ் கஸ்டடியில் முகிலன் இல்லை!’ - ஹென்றி திபேன்

``காணாமல் போன சூழிலியல் போராளி முகிலன் போலீஸ் கஸ்டடியில் இல்லை" என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். 

 முகிலன்

சுற்றுச்சூழல் போராளியான முகிலன் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் சில காவல்துறை உயரதிகாரிகள்தான் என்றும், காவல்துறை, ஸ்டெர்லைட் அடியாட்கள் உதவியுடன்தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அரங்கேற்றியதாகவும், அதற்கான வீடியோவையும் ஆவணங்களையும் அண்மையில் சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு முடிந்து ஊருக்குத் திரும்புவதற்காக கடந்த 15-ம் தேதி இரவு எழும்பூர் ரயில் நிலையம் வந்தவர் காணாமல் போனார். 

மக்கள் போராட்டங்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்தவர் என்பதால் யாராவது கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து வந்தது. அதே நேரத்தில் உடன்குடியில் போலீஸார் விசாரணை நடத்துவதாகத் தகவல் பரவியது. அந்தத் தகவலும் உறுதிப்படுத்தாத நிலையில், முகிலனுக்கு ஆதரவாகச் சமூக இயக்கங்களும் மனித உரிமை ஆர்வலர்களும் முகிலனை மீட்டுத்தரக்கோரி போராடி வருகின்றனர். இது தொடர்பான ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் 4-ம் தேதிக்குள் முகிலன் பற்றிய விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க ரயில்வே போலீஸ் மற்றும் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

முகிலன் காணாமல் போய் 14 நாள்கள் ஆன நிலையில் அவரைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை. இது குறித்து மனித உரிமை  ஆர்வலர் ஹென்றி திபேனிடம் பேசியபோது, ``காவல்துறை தரப்பிலிருந்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. போலீஸ் கஸ்டடியில் இருந்திருந்தால் உறுதியாக எந்த நிலையிலாவது அவரைப்பற்றிய நிலை தெரிய வந்திருக்கும். அதனால் அவர் போலீஸ் கஸ்டடியில்  இல்லை என்பது உறுதியாகிறது. அவரால் சிக்கலுக்கு உள்ளானவர்களால் கடத்தப்பட்டிருக்கலாம். குறிப்பாக துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகளின் செயல்களை தோலுரித்துக் காட்டியுள்ளார். அதேபோன்று  செல்வாக்கு படைத்த நபர்களை நேரடியாக எதிர்த்துள்ளார். அப்படியானவர்களால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது'' என்றார் 


[X] Close

[X] Close