``தே.மு.தி.க வரும்; காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் கூட்டணி இறுதிபெறும்!” -பொன்.ராதாகிருஷ்ணன் | Central minister pon.Rathakrishnan on modi visit to kumari

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (01/03/2019)

கடைசி தொடர்பு:07:40 (01/03/2019)

``தே.மு.தி.க வரும்; காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் கூட்டணி இறுதிபெறும்!” -பொன்.ராதாகிருஷ்ணன்

``தே.மு.தி.க. நிச்சயமாக எங்கள் கூட்டணிக்கு வரும். மார்ச் 6-ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இறுதிபெறும்" என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் இன்று அரசு திட்டங்களை தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேசுகிறார். இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ``பிரதமர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சிலர் தகவல் பரப்பியதில் உண்மை இல்லை. பிரதமர் மோடி சுமார் 40,000 கோடியிலான முடிக்கப்பட்ட திட்டங்களை கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தொடங்கி வைக்கிறார். ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய ரயில் பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேடை

தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. தே.மு.தி.க. நிச்சயமாக எங்கள் கூட்டணிக்கு வரும். மார்ச் 6-ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இறுதிபெறும். பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விடுதலை செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை பாகிஸ்தான் சகோதரன் எனக் கூறியதும் மகிழ்ச்சி அளிக்கிறது. சமூக வலைதளங்களில் ராணுவம் குறித்து பரப்பப்படும் வதந்திகள் சமூக அக்கறை கொண்டு நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.


[X] Close

[X] Close