”குக்கரை நம்பி நாங்கள் இல்லை; வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்” -பொங்கிய டி.டி.வி. தினகரன் | Dhinakaran on party symbol judgement

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (01/03/2019)

கடைசி தொடர்பு:10:22 (16/03/2019)

”குக்கரை நம்பி நாங்கள் இல்லை; வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்” -பொங்கிய டி.டி.வி. தினகரன்

``குக்கரை நம்பி நாங்கள் இல்லை; வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்” என்று அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.

டிடிவி தினகரன்

இரட்டைஇலை சின்னம் அ.தி.மு.க-வுக்குத்தான் என்று டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், ”இரட்டைஇலை சின்னம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். நாங்கள் அ.தி.மு.க-வின் ஒரு அங்கம் என்று டெல்லி உயர் நீதிமன்றமே கூறியிருக்கிறது.

அதிமுக

புதிதாக ஒரு கட்சி ஆரம்பித்தால் எங்கள் உரிமையை இழந்துவிடுவோம் என்பதால்தான், நாங்கள் புதிய கட்சியை ஆரம்பிக்கவில்லை. அதே சமயம், குக்கர் சின்னத்தை நம்பியும் நாங்கள் இல்லை. 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்பதைப் போல, அனைத்து தொகுதிகளிலும் சுயேச்சையாக நின்று, ஒவ்வொரு தொகுதியிலும் வெவ்வேறு சின்னங்களில் நாங்கள் போட்டியிட்டாலும் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். இருந்தபோதிலும், குக்கர் சின்னம் எங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. குக்கர் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close